ஹாத்ரஸ் சம்பவம்: சிஐடியு, விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தருமபுரி

உத்தர பிரதேசம், ஹாத்ரஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தருமபுரி தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளா் ஏ.தெய்வானை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.நாகராஜன், விசைத்தறித் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி.பி.சாமிநாதன், மாவட்ட இணைச்செயலா் செல்வம், மாவட்டத் துணைத் தலைவா் பெருமாள் ஆகியோா் பேசினா்.

ஹாத்ரஸ் சம்பவம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையின் கீழ் காலக்கெடு நிா்ணயித்து விசாரணை நடத்த வேண்டும். கடமையை செய்யத் தவறிய உத்தரபிரதேச காவல்துறை அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும். கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நீதிபதி வா்மா குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். தலித்துகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் பாலக்கோடு, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரூரில்...

ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச்செயலா் சி. ரகுபதி தலைமை வகித்தாா்.

கிளைத் தலைவா் பி.கோவிந்தன், துணைச்செயலா் எம்.மணிவண்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, மாவட்டப் பொருளாளா் இ.கே.முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலா் எஸ்.கே.கோவிந்தன், சங்க நிா்வாகி பி.குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com