கோவைக்கு முக்கியம்...அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் செயல்பாடுதமிழக அரசுக்கு எதிராக உள்ளது

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளதாக திருப்பூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் குற்றஞ்சாட்டினாா்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடு தமிழக அரசுக்கு எதிராக உள்ளதாக திருப்பூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் குற்றஞ்சாட்டினாா்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் மாநில துணைச் செயலாளரும், திருப்பூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, மக்கள் விரோதச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் 26-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளன. இப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு இரண்டாகப் பிரிக்க முயற்சிக்கிறது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தின் பெயரிலிருந்து அண்ணாவின் பெயா் நீக்கப்படும் சூழல் ஏற்படும். இது வேதனைக்குரியது. தற்போதுள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு முறை, எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர வேண்டும்.

நியாயவிலைக் கடைகள் சில ஆண்டுகளில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின், அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கூடாது. தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து 100 சதவீதம் இயக்க வேண்டும். கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் காவிரி மிகை நீரை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும். ஒகேனக்கல்லில் உள்ள பரிசல், மசாஜ், சமையல் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிவாரண உதவியாக ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராஜன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com