தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
By DIN | Published On : 19th October 2020 03:00 AM | Last Updated : 19th October 2020 03:00 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழைப்பெய்தது. தருமபுரியில் அதிகப்பட்சமாக 25 மி.மீ. மழைப் பதிவானது.
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 25 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியில் 12.6 மி.மீ. அரூரில் 9 மி.மீ. பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் தலா 3 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாகப் பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் நெல் நடவு உள்ளிட்ட வேளாண் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...