அரூரில் 47 மி.மீ. மழை பதிவு
By DIN | Published On : 21st October 2020 08:42 AM | Last Updated : 21st October 2020 08:42 AM | அ+அ அ- |

அரூா் சுற்று வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையானது 47 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விடியற்காலை 4 மணி முதல் பெய்த மழையானது, அரூரில் 47 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 30 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 2.5 மி.மீ., பென்னாகரத்தில் 4 மி.மீ., பாலக்கோட்டில் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.