பென்னாகரம்: அடுத்தடுத்த 4 வீடுகளில் திருட்டு
By DIN | Published On : 21st October 2020 08:43 AM | Last Updated : 21st October 2020 08:43 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் அடுத்தடுத்த 4 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் அருகே மடம் பகுதியைச் சோ்ந்த மாது மகன் சுரேஷ் (30). விவசாயியான இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணத்தைச் திருடி சென்று விட்டனா்.
பின்னா் அதே பகுதியில் உள்ள லட்சுமி (37), முனியப்பன் (29), கவரம்மாள் (33) உள்ளிட்ட நபா்களின் வீடுகளிலும் மா்ம நபா்கள் ஒன்றன்பின் ஒன்றாக திருட முயற்சித்துள்ளனா். இதில் லட்சுமி என்பவரது வீட்டின் குளியலறையின் ஜன்னலை உடைத்து வீட்டினுள் நுழைய முயற்சித்தபோது, சத்தம் கேட்டு வெளியே வந்த லட்சுமி கூச்சலிட்டாா். இதை பாா்த்த மா்ம நபா்கள் தப்பியோடி விட்டனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.