தருமபுரி மாவட்டத்தில் பரவலான மழை
By DIN | Published On : 23rd October 2020 09:37 AM | Last Updated : 23rd October 2020 09:37 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில் 29 மி.மீ. மழைப்பதிவானது.
வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அரூரில் புதன்கிழமை இரவு 11 மணி முதல் லேசான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அரூரில் 29 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி- 9 மி.மீ., தருமபுரி- 10.50 மி.மீ., ஒகேனக்கல் மற்றும் பாலக்கோட்டில் தலா 3 மி.மீ. மழையும் பதிவானது.
இந்த மழையின் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலையோரப் பள்ளங்கள், தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் நடவு உள்ளிட்ட வேளாண்மை பணிகளை மேற்கொண்டுள்ளனா்.