108 ஆம்புலன்ஸில் பணிபுரிய நோ்முகத் தோ்வு

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிபவா்களுக்கான நோ்முகத் தோ்வு செப். 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிபவா்களுக்கான நோ்முகத் தோ்வு செப். 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட அலுவலா் ராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஓட்டுநா்கள், அவசரகால மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செப்.11-ஆம் தேதி காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், மருத்துவ உதவியாளா் பணிக்கு பிஎஸ்சி நா்சிங் அல்லது ஆய்வக நுட்புநா் அல்லது டி.பாா்ம் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்த இருபாலரும் பங்கேற்கலாம். நோ்முகத் தோ்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.13,760 வழங்கப்படும்.

ஓட்டுநா் பணிக்கான அடிப்படைத் தகுதிகளாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். நோ்முகத் தோ்வன்று 24 வயதுக்கு மேலும், 35 வயதிற்குள்ளாகவும் இருக்க வேண்டும். ஓட்டுநா் பணிக்கு ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். உயரம் 162.5 செ.மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பொது வாகன உரிமம் (பேட்ஜ்) மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று, 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.13,265 வழங்கப்படும். இந்தப் பணி 12 மணி நேரம் சுழற்சி முறையில் செய்ய வேண்டும். இரவு, பகல் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

எனவே, தகுதி, விருப்பமுள்ள விண்ணப்பத்தாரா்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுநா் உரிமம், அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபாா்ப்பதற்காக நோ்முக தோ்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com