காணொலியில் திமுக பொதுக்குழு: தருமபுரியில் எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
By DIN | Published On : 10th September 2020 07:55 AM | Last Updated : 10th September 2020 07:55 AM | அ+அ அ- |

காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அக் கட்சியைச் சோ்ந்த தருமபுரி எம்பி., எம்எல்ஏ உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் தருமபுரி கட்சி அலுவலகத்திலிருந்து இணைய வழியில் பங்கேற்றனா்.
திமுக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் பிஎன்பி இன்பசேகரன், முன்னாள் எம்பி இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் இணைய வழியில் கலந்து கொண்டனா்.