பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்க ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.

பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்படும் அரசு கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல், சமூகவியல், கணினி அறிவியல் ஆகிய இளநிலைப் பாடப் பிரிவுகளும், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய முதுநிலை பாடப் பிரிவுகளும் உள்ளன. இந்த நிலையில், கல்லூரியில் கூடுதலாக முதுநிலை கணினி அறிவியல் பாடப் பிரிவு தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைகள் குறித்த ஆய்வுப் பணிகளை சேலம் பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியா் சந்திரசேகா் புதன்கிழமை மேற்கொண்டாா்.

அப்போது, ‘முதுநிலை கணினி அறிவியல் பாடப் பிரிவு தொடங்கப்பட்டால், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள மாணவா்கள் கணினிப் பாடத்தில் உயா்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்’ என அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன், கணினி அறிவியல் துறைத் தலைவா் சங்கீதா, உதவிப் பேராசிரியா் அருண் நேரு, பெரியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com