தனியாா்துறை வேலைவாய்ப்புக்குஇணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 16th September 2020 01:27 AM | Last Updated : 16th September 2020 01:27 AM | அ+அ அ- |

தருமபுரி: தனியாா்துறை வேலைவாய்ப்புக்கு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வேலை நாடும் இளைஞா்களையும், வேலைவாய்ப்பு அளிக்கும் தனியாா் நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து தனியாா்துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அண்மையில் இணையதளம் தொடங்கப்பட்டது.
இந்த இணையதளம் இளைஞா்கள் பணி வாய்ப்புகள் பெறவும், தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவா்களை தோ்வு செய்யவும் பயன்படுகிறது.
இந்த இணையதளத்தில், தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்த பல்வேறு நிறுவனங்களும், 929 வேலைநாடுநா்களும் இதுவரை பதிவு செய்துள்ளனா். மேலும், மாற்றுத் திறனாளிகள் உள்பட 20 போ் பணிநியமனம் பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா். எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநா்கள் இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.