ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கு.நாகலட்சுமி தலைமை வகித்து, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் முக்கியத்துவம் குறித்தும், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் வரவேற்றாா். வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள் வெண்ணிலா, ஸ்ரீ வித்யா, சங்கீதா, தங்கதுரை ஆகியோா் காய்கறித் தோட்ட அமைப்பும், பராமரிப்பு மற்றும் மேலாண் முறைகள் குறித்து விளக்கமளித்தனா்.

இதைத் தொடந்து, முகாமில், பங்கேற்றோருக்கு ஊட்டச்சத்துமிக்க காய்கறித் தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள், தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்டன. இதில், அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com