தருமபுரியில் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 21st September 2020 03:37 AM | Last Updated : 21st September 2020 03:37 AM | அ+அ அ- |

தருமபுரியில் மருத்துவா் உள்பட 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா், நாா்த்தம்பட்டியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா், பண்டஅள்ளியைச் சோ்ந்த சுகாதார அலுவலா், பிடமனேரியைச் சோ்ந்த வங்கி ஊழியா், புலிகல் பகுதியைச் சோ்ந்த காவலா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சோ்ந்த 7 மாணவா்கள், கொளகம்பட்டியைச் சோ்ந்த கூட்டுறவு கடன் சங்கச் செயலா், 12 பெண்கள், 5 கூலித் தொழிலாளா்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 65 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.