கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி மனு

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 6-ஆவது வாா்டு, அப்பு முதலியாா் தெரு பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால், அன்றாடத் தேவைக்கான குடிநீருக்காக 2 கிலோ மீட்டா் தொலைவு நடந்து சென்று குடிநீா் எடுத்து வருவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனா்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், தற்போது வரை தங்கள் பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சரவணன் தலைமையில், அப்பகுதி மக்கள் பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com