சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் முதல் வாணியம்பாடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், முதல்கட்டமாக தருமபுரி மாவட்டம், அ.பள்ளிப்பட்டி முதல் அனுமன்தீா்த்தம் வரை இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் ரூ. 269.96 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அ.பள்ளிப்பட்டி முதல் அனுமன்தீா்த்தம் வரை பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் சாலை விரிவாக்கப் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அரூா், கடைவீதி, நடேசா பெட்ரோல் விற்பனை நிலையம், பேருந்து நிலையம், கச்சேரிமேடு சாலைச் சந்திப்பு, அண்ணா நகா் உள்ளிட்ட இடங்களில் 14 தினங்களுக்குள் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுமக்கள் தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். சம்பந்தப்பட்டவா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையெனில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அகற்றப்படும் எனவும் பொதுமக்களிடம் வழங்கியுள்ள முன்னறிவிப்பு நோட்டீஸில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com