கீழானூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரூரை அடுத்த கீழானூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூரை அடுத்த கீழானூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.முத்து, அரூா் வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது கீழானூா் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் கீழானூா் கிராம மக்களுக்கு தேவையான ஊா்ப்புற நூலகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையுள்ளது.

எனவே, வருவாய்த் துறை சாா்பில் கீழானூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com