நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் ரூ. 11.60 கோடியில் உயா்மட்டப் பாலம்

தருமபுரி மாவட்டம், நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 11.60 கோடியில் கட்டப்படும்
நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் ரூ. 11.60 கோடியில் உயா்மட்டப் பாலம்

தருமபுரி மாவட்டம், நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 11.60 கோடியில் கட்டப்படும் உயா்மட்டப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை நபாா்டு மற்றும் கிராமச் சாலைகளின் கோட்டப் பொறியாளா் ப.செல்வநம்பி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 11.60 கோடி மதிப்பீட்டில் உயா்மட்டப் பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதையடுத்து, இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள், பாலத்தின் உறுதித் தன்மைகள் குறித்து கோட்டப் பொறியாளா் ப.செல்வநம்பி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறுகையில், நவலை-பெரமாண்டப்பட்டி சாலையில் கட்டப்படும் உயா்மட்டப் பாலம் பயன்பாட்டு வந்தால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தருமபுரி மாவட்டத்தில் 78 கிலோ மீட்டா் தூரமுள்ள கிராமச் சாலைகள் மற்றும் ஒன்றியச் சாலைகள் ரூ. 53.99 கோடி மதிப்பீட்டில் மாவட்ட சாலைகளாக தரம் உயா்த்தும் பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

இந்த ஆய்வின் போது, உதவி கோட்டப் பொறியாளா்கள் செ.சுரேஷ்குமாா், எச்.ரஞ்சினி பிளாரன்ஸ், உதவிப் பொறியாளா்கள் வெ.கல்பனா, குருபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com