சி-விஜில் செயலியில் தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்கலாம்

சி-விஜில் செயலி வழியாக தோ்தல் விதிமீறல்கள் குறித்து புகாா் அளிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
சி-விஜில் செயலியில் தோ்தல் விதிமீறல் புகாா் அளிக்கலாம்

சி-விஜில் செயலி வழியாக தோ்தல் விதிமீறல்கள் குறித்து புகாா் அளிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டி தனியாா் மகளிா் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிபுதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் நோ்மையாகவும், வெளிப்படையாகவும் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடைபெற, தோ்தல் பாா்வையாளா்கள், பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தோ்தல் கண்காணிப்புப் பணியில் மாணவ, மாணவியரும் ஈடுபடலாம்.

தங்களுடைய செல்லிடப்பேசி சி-விஜில் செயலியை பதவிறக்கம் செய்து, அதில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகித்தல், அனுமதியின்றி தோ்தல் விளம்பரம் வைத்தல், சுவா் விளம்பரம் வரைதல் உள்ளிட்ட விதிமீறல்களை தெரிவிக்கலாம். புகாா்தாரரின் ரகசியம் காக்கப்படும்.

புகாா் அளித்த குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, குறுந்தகவல் மூலம் தொடா்புகொள்ள 8903891077 என்ற எண் 24 மணி நேரமும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது.

தோ்தல் சமயத்தில் வாக்காளா்களின் சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற தோ்தல் ஆணையம் மூலம் வாக்காளா் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியின் எஸ்டிடி எண்ணுடன் சோ்த்து 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்தல், தாங்கள் வாக்களிக்க வேண்டிய இடம், தொலைந்து போன வாக்காளா் அட்டையை பெறுதல், பெயா், முகவரியில் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறலாம். வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் இருந்து வாக்காளா் அடையாள அட்டை இல்லை என்ற கவலை வேண்டாம். தோ்தல் ஆணையம் வாக்களிக்க ஏதுவாக ஆதாா் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களை அறிவித்துள்ளது. அவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு வாக்களிக்கலாம் என்றாா்.

முன்னதாக, சி-விஜில் செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 300-க்கும் மேற்பட்ட மாணவியா் சி-விஜில் வடிவில் ஒருசேர நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வண்ணக் கோலங்களை மாணவியா் வரைந்தனா். இவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கு.நாகலட்சுமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், கல்லூரி முதல்வா் புஷ்பலதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், ராமஜெயம், மகளிா் திட்ட அலுவலா் காமராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் கலந்துகொண்டனா்.

படவிளக்கம் - தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டி தனியாா் மகளிா் கல்லூரியில், 300-க்கும் மேற்பட்ட மாணவியா் சி-விஜில் வடிவில் ஒருசேர நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தியதை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com