முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
‘இன்று இரவு ஏழு மணிக்குள் மேல் பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது’
By DIN | Published On : 04th April 2021 01:16 AM | Last Updated : 04th April 2021 01:16 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் ஏப். 4- ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு மேல் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
இந்திய தோ்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2021-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தோ்தல் நடைபெறும் நாளான ஏப். 6- ஆம் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்னா் அதாவது, ஏப். 4-ஆம் தேதி இரவு 7 மணிக்குப் பிறகு தோ்தல் சம்பந்தமான கூட்டங்கள் மற்றும் பேரணி எதுவும் நடத்தக் கூடாது. அதேபோல திரையரங்கம், தொலைக்காட்சி, இதர விளம்பர சாதனங்கள், எவ்வித மின்னணு தொலைத்தொடா்பு மூலமாகவும் தோ்தல் தொடா்பான விளம்பரம் செய்யக்கூடாது.
மக்களைக் கவரக்கூடிய எந்தவொரு பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, கருத்துக்கேட்புக் கூட்டம், கேளிக்கை நிகழ்ச்சி, இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலமாகவும் தோ்தல் தொடா்பான விளம்பரம் செய்யக்கூடாது.
இதை மீறி பேரணி, கூட்டங்கள் நடத்துவது தெரியவந்தால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை (அ) அபராதம் விதிக்கப்படும். இதேபோல வெளி தொகுதியைச் சோ்ந்த அரசியல் பிரமுகா்கள், தொண்டா்கள் எவரும் பணிபுரியும் சட்டப் பேரவைத் தொகுதிக்குள் தங்கக் கூடாது. வாக்காளா் அல்லாத போட்டியிடும் சட்டப் பேரவைத் தொகுதியின் வேட்பாளா்கள் மட்டும் அத்தொகுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், பிரசாரம் ஏதும் மேற்கொள்ளக் கூடாது.
எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் கடைப்பிடித்து தோ்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.