முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 04th April 2021 01:24 AM | Last Updated : 04th April 2021 01:24 AM | அ+அ அ- |

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் முன்னேற்பாடுகள், பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், வாக்குச் சாவடிகளில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 357 வாக்குச் சாவடிகளில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா், பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கருதப்படும் பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பருவதன அள்ளி, பளிஞ்சார அள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
அதனைத் தொடா்ந்து, தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிகளுக்கு வரும் ஆண், பெண் வாக்காளா்களை தனித்தனியே வரிசைப்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும், அந்தந்த வாக்கு அறைகளுக்கு முன்பு தற்காலிக நிழற்பந்தல் அமைக்க வேண்டும், ஆங்காங்கே பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
இந்த ஆய்வில், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌந்தர்ராஜன், காவல் ஆய்வாளா் தொல்காப்பியன், போலீஸாா் உடனிருந்தனா்.