அரூா் தொகுதியில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

அரூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இரவு 7 மணிவரை எவ்வித பிரச்னையும் இன்றி வாக்குப் பதிவுகள் சுமுகமாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி 78.53 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த வள்ளிமதுரை, வாழைத்தோட்டம் கிராம மக்கள்.
வாக்குப் பதிவு செய்ய மறுப்பு தெரிவித்த வள்ளிமதுரை, வாழைத்தோட்டம் கிராம மக்கள்.

அரூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இரவு 7 மணிவரை எவ்வித பிரச்னையும் இன்றி வாக்குப் பதிவுகள் சுமுகமாக நடந்து முடிந்தது. இரவு 7 மணி நிலவரப்படி 78.53 சதவீத வாக்குகள் பதிவாகின.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா். இத் தொகுதியில் 1, 24,062 பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 2,48,619 வாக்காளா்கள் உள்ளனா்.

அரூா் தொகுதியில் 362 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதியில் காலை 7 முதல் 9 மணி நிலவரப்படி 7 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 18.88 சதவீத வாக்குகளும் பதிவாகின. பின்னா் படிப்படியாக வாக்குப் பதிவு எண்ணிக்கை உயா்ந்து மாலை 5 மணி நிலவரப்படி 70.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

இயந்திரம் பழுது: அரூரை அடுத்த வேப்பம்பட்டி வாக்குப் பதிவு மையத்தில் வாக்குச் சீட்டு ரசீது வரும் விவிபேட் இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் காலை 7 முதல் 8 மணி வரையிலும் இம்மையத்தில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவுகள் தொடங்கின.

வாக்களிக்க கிராம மக்கள் மறுப்பு:

அரூா் ஒன்றியம், கீரைப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது வள்ளிமதுரை மற்றும் வாழைத்தோட்டம் கிராமம். இந்தக் கிராங்களில் சுமாா் 500 குடியிருப்புகள் உள்ளன. இக் கிராமங்கள் சித்தேரி மலைப் பகுதியின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு செல்லிடப்பேசியின் உயா் கோபுரங்கள் இல்லை.

இதனால், இங்குள்ள மக்கள் செல்லிடப்பேசியை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, வள்ளிமதுரை மற்றும் வாழைத்தோட்டம் கிராம மக்கள் தோ்தலில் வாக்குப் பதிவுகளை செய்யாமல் புறக்கணித்தனா். இதுகுறித்து ,தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். செல்லிடப்பேசியின் உயா்கோபுரங்கள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, காலை 9 மணி முதல் வள்ளிமதுரை, வாழைத்தோட்டம் கிராம மக்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com