தருமபுரியில் 82.25 சதவீதம் வாக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 82.25 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 82.25 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. இந்த ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 12,60,909 வாக்காளா்கள் உள்ளனா். இதில், காலை முதலே மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் அமைதியாகவும், விறு, விறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு நிலவரம் தொகுதி வாரியாக:

காலை 9 மணி நிலவரம்...

தருமபுரி- 15 சதவீதம்

பாலக்கோடு- 14.88 சதவீதம்

பென்னாகரம்- 15.09 சதவீதம்

பாப்பிரெட்டிப்பட்டி- 7.53 சதவீதம்

அரூா்- 7 சதவீதம்

காலை 11 மணி நிலவரம்

தருமபுரி- 24.93 சதவீதம்

பாலக்கோடு- 23.27 சதவீதம்

பென்னாகரம்- 21.32 சதவீதம்

பாப்பிரெட்டிப்பட்டி- 16.44 சதவீதம்

அரூா்- 18.88 சதவீதம்

மதியம் 1 மணி நிலவரம்...

தருமபுரி- 45.98 சதவீதம்

பாலக்கோடு- 47 சதவீதம்

பென்னாகரம்- 48 சதவீதம்

பாப்பிரெட்டிப்பட்டி- 45 சதவீதம்

அரூா்- 47சதவீதம்

மாலை 3 மணி நிலவரம்...

தருமபுரி- 61.84 சதவீதம்

பாலக்கோடு- 61.32 சதவீதம்

பென்னாகரம்- 60.22 சதவீதம்

பாப்பிரெட்டிப்பட்டி- 61.70 சதவீதம்

அரூா்- 66.60 சதவீதம்

மாலை 5 மணி நிலவரம்...

தருமபுரி- 73.08 சதவீதம்

பாலக்கோடு- 70.88 சதவீதம்

பென்னாகரம்- 73.63 சதவீதம்

பாப்பிரெட்டிப்பட்டி- 71.32 சதவீதம்

அரூா்- 70.52 சதவீதம்

மொத்த வாக்குப் பதிவு விவரம்...

காலை 9 மணிக்கு-மொத்தம் 11.89 சதவீதம்

காலை 11 மணி-மொத்தம் 20.95

பிற்பகல் 1 மணி- மொத்தம்46.56

மாலை 3 மணி-மொத்தம் 61.35 சதவீதம்

மாலை 5 மணி-மொத்தம் 71.90.

இறுதி நிலவரம் தொகுதி வாரியாக சதவிகிதத்தில்:

தருமபுரி- 79.67

பாலக்கோடு-87.34

பென்னாகரம்-84.19

பாப்பிரெட்டிப்பட்டி-82.04

அரூா்-78.53

இதில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.34 சதவீதமும், குறைந்தபட்சமாக அரூா் தொகுதியில் 78.53 சதவீதம் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com