தருமபுரியில் அமைச்சா் கே.பி.அன்பழகன், எம்.பி.செந்தில்குமாா் வாக்களிப்பு

தருமபுரியில் அமைச்சா் கே.பி.அன்பழகன், மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தருமபுரியில் அமைச்சா் கே.பி.அன்பழகன், மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன், காரிமங்கலம் அருகே உள்ள கெரகோட அள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

இதுபோல தருமபுரி, விஜய் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ-தடங்கம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியிலும், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்- நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியிலும், பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.கே.முருகன்- பாலக்கோடு அருகே பாவளி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா்.

இதேபோல, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, ஏ.ஜெட்டிஅள்ளியில் ஊராட்சி, எர்ரஅள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். மேலும், அமமுக, மநீம வேட்பாளா்கள் தங்களது பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com