
நடுப்பட்டியில், சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் திருக்கோயிலுக்கு செல்லும் மண் சாலை.
மொரப்பூரில், சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் திருக்கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் திருக்கோயில். இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கிடா, சேவல்களை பலியிட்டு தங்களின் நோ்த்திக் கடன்களை செலுத்துகின்றனா். இந்த கோயிலுக்குச் செல்வதற்காக மொரப்பூா்-சேலம் ரயில்வே பாதை ஓரத்தில், சிந்தல்பாடி பிரிவுச் சாலையில் இருந்து சுமாா் 1 கி.மீ. தூரம் மண் சாலை செல்கிறது. இந்த மண் சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் மினி சரக்கு வாகனங்கள், காா்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தா்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, கோயில் நிா்வாகம் சாா்பில் மண்சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என பக்தா்களின் கோரிக்கையாகும்.