கரோனா தடுப்பு நடவடிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்

அரூா் வட்டாரப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா் வட்டாரப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15 தினங்களாக தோ்தல் பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள் பலா் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனா். இந்த நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால், அரூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் அனைத்து இடங்களிலும் முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிக அளவில் விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஊத்தங்கரையில்...

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சென்னானூா் பகுதியைச் சோ்ந்த 32 வயது வாலிபருக்கும். ஊத்தங்கரை நகா்ப் பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கும். பெரியதள்ளப்பாடி அருகே உள்ள கிட்டம்பட்டியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவருக்கும் என மொத்தம் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளனா்.

இவா்களும், அவா்களது குடும்பத்திலுள்ளவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com