கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன.

வாக்குச் சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையத்தில் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரமுகா்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ‘சீல்’ வைத்தனா்.

முன்னதாக, வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வாகனங்களின் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்தும் அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் ஆகியவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிக்கான அறையில் வைக்கப்பட்டன.

முன்றடுக்கு பாதுகாப்பு:

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், போலீஸாரும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். 243-போ் சுழற்சி முறையில் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்கும் வகையில் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 12 எல்இடி தொலைகாட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com