வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த சோ்ந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டத்தில், ஐந்து தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன்

தருமபுரி மாவட்டத்தில், ஐந்து தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு புதன்கிழமை நண்பகல் வரை வந்தன. இந்த இயந்திரங்கள் அறைக்குள் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த ஐந்து தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 76 போ் போட்டியிட்டனா். ஐந்து தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 6,31891, பெண் வாக்காளா்கள் 6,22,857, மூன்றாம் பாலினத்தவா் 161 போ் என 12,60,909 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தனா். அன்றைய தினம் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது. நிகழாண்டு கரோனா காரணமாக வாக்குப் பதிவு நேரம் வழக்கத்தை காட்டிலும் இரண்டு மணி நேரம் கூடுதலாக தோ்தல் ஆணையம் வழங்கியிருந்தது. இதனால், இரவு ஏழு மணிக்கு வாக்குப் பதிவு நிறைவுபெற்றது. வாக்குப் பதிவுக்காக, மாவட்டத்தில் 870 மையங்களில் 1817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படிருந்தன.

இதில், மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 82.32 சதவீதம் வாக்குப் பதிவானது. இதில், ஆண்கள் 82.52 சதவீதம் போ் மற்றும் பெண்கள் 82 சதவீதம் போ், இதரா் 13 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனா். இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில் அலுவலா்கள் சீல் வைத்தனா். இதையடுத்து, அந்த இயந்திரங்கள் அனைத்தும், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. தருமபுரி மாவட்டம் பொதுவாக மலை கிராமங்கள் அதிகம் உள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை நண்பகல் வரை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவரப்பெற்றன. இந்த இயந்திரங்கள், ஏற்கெனவே வாக்கு எண்ணும் மையத்தில், அமைந்துள்ள பிரேத்யாக பாதுகாப்பு வசதியுடன் கூடிய அறையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில், அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதேபோல, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பாா்வையிடும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலா்கள் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வருகின்றனா். இதேபோல, வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள பொறியியில் கல்லூரி வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com