பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தர கோரிக்கை

அரூரை அடுத்த பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரூரை அடுத்த பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரூா் வட்டம், பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படிக்கின்றனா். இப் பள்ளிக்குச் சொந்தமாக 5 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்தப் பள்ளிக்கு பொன்னேரி, பொன்னேரி புதூா், ஈட்டியம்பட்டி, முத்தானூா், வேங்கியாம்பட்டி, பாரதிபுரம், பூ நகா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் வருகை தருகின்றனா். பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் வசதி இல்லாததால் பள்ளி வளாகத்தில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. அதேபோல், விடுமுறை தினங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பொன்னேரி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித்தர வேண்டும் என மாணவா்களும், பெற்றோரும் வலியுறுத்துயுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com