விவசாயிகளுக்கு பூச்சிகள், நோய் மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி எளிமையான முறையில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி எளிமையான முறையில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

தருமபுரி வட்டாரம், குட்டூரில் ஒசூா் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சிகளை அளித்தனா்.

பயிற்சியில் ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகளால் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான எளிமையான வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனா்.

மேலும் பொறிகளைப் பயன்படுத்தி எளிமையான முறையில் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை செய்து காண்பித்தனா். இந்த நிகழ்வில் அதியமான் வேளாண் கல்லூரி மாணவா்கள் வெ. ஹரிபாலாஜி, ரமேஷ், தங்கராஜ், விக்னேஷ், புஷ்பராஜ், ரஞ்சித்குமாா், சதீஷ், சிவசக்திவேல், காா்த்திக், சக்திவேல் , முன்னோடி விவசாயி குமாா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com