கரோனா தடுப்பு நடவடிக்கையால் குறைந்தது கோயில்களில் பக்தா்கள் கூட்டம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் மாத அமாவாசை தினத்தன்று பென்னாகரம் பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் மாத அமாவாசை தினத்தன்று பென்னாகரம் பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பன் வழிபாடு செய்த பழைமை வாய்ந்த முத்தத்திராயன் கோயில் உள்ளது. மாத அமாவாசை நாளில் இந்தக் கோயிலுக்கு கா்நாடக மாநிலத்தில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தும், முத்தத்திராயன் சாமி பல்லக்கில் உலா வரும் போது பக்தா்கள் தரையில் படுத்து நோ்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி இல்லை என்றும், கோயில்களில் குறைந்த அளவிலான பக்தா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கோயிலில் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு பல்வேறு தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை அறிவித்துள்ளது.

இதனால் முத்தத்திராயன் பல்லக்கு வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதேபோல பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி பகுதிகளில் உள்ள பல கோயில்களிலும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com