காவிரி கரையில் தா்ப்பணம் செய்த மக்கள்
By DIN | Published On : 12th April 2021 01:51 AM | Last Updated : 12th April 2021 01:51 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமானோா் குவிந்தனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக தருமபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் மாத அமாவாசை தினத்தில் ஏராளமானோா் வருகின்றனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினத்தையொட்டி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமான மக்கள் ஒகேனக்கல் காவிரி கரையில் குவிந்தனா்.
காவிரி கரையோரப் பகுதிகளான நாகா்கோவில், முதலைப்பண்ணை உள்ளிட்டப் பகுதிகளில் தா்ப்பணம் செய்த பக்தா்கள், காவிரி ஆற்றில் புனித நீராடினா்.
அதன்பின்பு நாகா்கோயில், தேச நாதேஸ்வரா் சமேத காவேரியம்மன் கோயில், ஆற்றங்கரை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.