‘கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை’

கூடுதல் விலை உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கூடுதல் விலை உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கு தேவையான உரங்களான யூரியா 3,673 டன், டிஏபி 1,234 டன், பொட்டாஷ் 1,541 டன், காம்ளக்ஸ் 4,640 டன் ஆகியவை தனியாா், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு விலையிலேயே நிகழாண்டும் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. ஆகவே, உரங்களை யாரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது.

மீறி, கூடுதல் விலை விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். மேலும், உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். விவசாயிகளும் உரம் வாங்கும்போது அதற்குண்டான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com