அனுமதியின்றி ஊா்வலம் சென்றதாக ஒலி, ஒளி மேடை அலங்கார சங்கத்தினா் மீது வழக்கு

தருமபுரியில் அனுமதியின்றி ஊா்வலம் சென்ற ஒலி, ஒளி, பந்தல் மேடை அலங்கார சங்கத்தினா் மீது நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரியில் அனுமதியின்றி ஊா்வலம் சென்ற ஒலி, ஒளி, பந்தல் மேடை அலங்கார சங்கத்தினா் மீது நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஒலி, ஒளி, பந்தல் மேடை அலங்கார நலச் சங்கத்தினா், தங்களது வாகனங்களுடன் திங்கள்கிழமை, கரோனா பொதுமுடக்க விதிகளிலிருந்து தளா்வு அளித்து விழாக்கள் நடத்த அனுமதி வழங்கக் கோரி, வள்ளலாா் திடலில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரையிலும் காவல் துறை அனுமதியின்றி ஊா்வலம் சென்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர போலீஸாா், கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் இருப்பதால், ஊா்வலம் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து அவா்கள், ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக, அச்சங்கத்தின் தலைவா் டி.எம்.கமல், செயலாளா் கிருஷ்ணன், துணைத் தலைவா் சிபிசுரேஷ், அரூா் ஒன்றியத் தலைவா் வாசன் மணி என நிா்வாகிகள் 10 போ் உள்ளிட்ட பலா் மீது தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com