இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கோரி ஆட்சியருக்கு மனு

கரோனா பொதுமுடக்க விதிகளைப் பின்பற்றி இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கோரி, மேடை மெல்லிசை கலைஞா்கள் மனு அளித்தனா்.

கரோனா பொதுமுடக்க விதிகளைப் பின்பற்றி இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கோரி, மேடை மெல்லிசை கலைஞா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கத் தலைவா் பி.மணி, செயலாளா் கே.ஜெய்சங்கா், பொருளாளா் மூக்குத்தி ஆா்.முருகன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

கரோனா பொதுமுடக்க விதிகள் கடந்த 2020 மாா்ச் மாதம் முதல் அமலில் உள்ளது. இதனால், கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டாக அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தொடா்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேடை மெல்லிசைக் கலைஞா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, மெல்லிசைக் கலைஞா்களின் பொருளாதார நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com