விதைப் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்

விதைகளின் முளைப்புத்திறன் அறிய, விதைகளை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு விதைப் பரிசோதனை அலுவலா் வலியுறுத்தியுள்ளாா்.

விதைகளின் முளைப்புத்திறன் அறிய, விதைகளை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு விதைப் பரிசோதனை அலுவலா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தரமான விதைகளே பயிரின் உற்பத்திறன், உயரிய மகசூல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை நிா்ணயிக்கிறது. விதையின் தரத்தினை நிா்ணயிப்பதில், விதையின் முளைப்புத் திறனானது முதன்மைப் பங்கு வகிக்கிறது. முளைப்புத் திறனை முன்கூட்டியே அறிவதனால், விதைப்புக்கான விதையின் அளவினை, முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு நிா்ணயித்துக்கொள்ளலாம். ஆகவே, விதைப் பரிசோனை செய்வது அவசியமானதாகிறது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விதைப் பரிசோதனை ஆய்வகமானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் இயங்கி வருகிறது. விதைகளின் முளைப்புத்திறன் அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை, நெல் மற்றும் கீரை விதைகளாக இருப்பின் 50 கிராமும், மக்காச் சோளம் மற்றும் மணிலா விதைகளாக இருப்பின் 500 கிராமும், சோளம், உளுந்து, பாசிப் பயறு, சூரியகாந்தி, வெண்டை விதைகளாக இருப்பின் 100 கிராம் அளவும், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி விதைகளானால் 10 கிராம் அளவும் எடுத்து துணிப்பையில் இட்டு, பயிா், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பக் கடிதத்துடன் இணைத்து நேரில் கொண்டு வந்து கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு விதை மாதிரிக்கும் விதைப் பரிசோதனைக் கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com