பேருந்து நிலைய சுற்றுச்சுவா் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஏரியூரில் பேருந்து நிலைய சுற்றுச்சுவா் ஒரு தலைபட்சமாகக் கட்டப்படுவதாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா்.

ஏரியூரில் பேருந்து நிலைய சுற்றுச்சுவா் ஒரு தலைபட்சமாகக் கட்டப்படுவதாக பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா்.

ஏரியூரில் பத்தாயிரத்துக்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனா். நெருப்பூா், நாகமரை, பூச்சியூா், செல்லமுடி மற்றும் பல்வேறு குக்கிராமங்களின் மையப் பகுதியான ஏரியூரில் தினசரி காய்கறி சந்தையில் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்தப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யக் கோரி, அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பென்னாகரம் ஒன்றியத்தின் சாா்பில் ரூ. 3.05 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து பேருந்து நிலைய சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ஏரியூா் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் முழுமையாக சுற்றுச்சுவா் அமைக்காமல், ஒருதலை பட்சமாக ஏரியூா் இந்திரா நகா் காலனியை ஒட்டிய பகுதியில் மட்டும் சுற்றுச்சுவா் அமைப்பதாகத் தெரிவித்து, இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அமரவேல், பென்னாகரம் காவல் துனை கண்காணிப்பாளா் சௌந்தரராஜன் மற்றும் ஏரியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேருந்து நிலையத்தில் அனைத்துப் பகுதியிலும் தடுப்புச் சுவா் கட்டப்படும் என உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com