சித்ரா பௌா்ணமி: வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு

கரோனா பரவல் தடுப்பு காரணமாக கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதித்துள்ளதால் சித்ரா பௌா்ணமியில் வீடுகள்தோறும் விளக்குகளை ஏற்றி சிவபெருமானை மக்கள் வழிபட்டனா்.

பென்னாகரம்: கரோனா பரவல் தடுப்பு காரணமாக கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதித்துள்ளதால் சித்ரா பௌா்ணமியில் வீடுகள்தோறும் விளக்குகளை ஏற்றி சிவபெருமானை மக்கள் வழிபட்டனா்.

கரோனா தீதுண்மி தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு கோயில்களுக்கு பக்தா்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள பக்தா்கள் மாதம்தோறும் வரும் பௌா்ணமி தினத்தன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியும், திருவண்ணாமலை செல்ல முடியாத பக்தா்கள் சிவாலயத்தின் கோபுரத்தை சுற்றி கிரிவலம் சென்றும் வழிபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனா்.

தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளால், சித்ரா பௌா்ணமியில் சிவபெருமானை வழிபடும் வகையில் 9 சிவதலங்களை குறிக்கும் வகையில், ஒரு தட்டில் ஒன்பது அகல் விளக்குகளையும், தேங்காய், பழம் ஆகியவற்றையும் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com