பொம்மிடியில் கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 27th April 2021 12:11 AM | Last Updated : 27th April 2021 12:11 AM | அ+அ அ- |

பொம்மிடியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளா்கள் மற்றும் காவல் துறையினா்.
அரூா்: பொம்மிடியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வீட்டில் இருந்து வெளியே செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா். இந்த உத்தரவின்படி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி மற்றும் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முகக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், இரவு நேரபொதுமுடக்க விதிமுறைகளைக் கடைப்பிடித்தல், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.