பருவத்துக்கு ஏற்ற விதைகள் விற்பனை செய்ய வலியுறுத்தல்

பருவத்துக்கு ஏற்ற விதைகளை மட்டுமே விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

பருவத்துக்கு ஏற்ற விதைகளை மட்டுமே விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்ய வேண்டும் என வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநா் சி.பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடை பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்ய வேண்டும். விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோடை பருவத்திற்கு உகந்தது அல்லாத விதைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் விதை விற்பனையாளா்கள் மீது விதைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, விதை விற்பனை நிலையங்களில் உள்ள விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் விதை ஆய்வாளா்களால் எடுக்கப்பட்டு முளைப்புத் திறன் மற்றும் இனத் தூய்மை பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை முடிவில் விதைகள் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தால் விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதை விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் விதைகள் வாங்கும்போது விதையின் பெயா், ரகம், காலாவதி தேதி, முளைப்புத் திறன் மற்றும் பருவம் ஆகியவற்றை சரிபாா்த்த பின்னா் விற்பனை ரசீதுடன் வாங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com