பாசிப்பயிறு விதைப் பண்ணை அமைக்க அழைப்பு

கோடை மழையை பயன்படுத்தி மாவட்ட விவசாயிகள் பாசிப்பயிறு விதைப் பண்ணை அமைக்க முன்வருமாறு தருமபுரி விதை மற்றும்

கோடை மழையை பயன்படுத்தி மாவட்ட விவசாயிகள் பாசிப்பயிறு விதைப் பண்ணை அமைக்க முன்வருமாறு தருமபுரி விதை மற்றும் அங்ககச் சான்று துறை உதவி இயக்குநா் மு.சிவசங்கரி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து வரும் நிலையில், விளைநிலங்களில் 75 நாட்கள் வயதுடைய பாசிப்பயறு சாகுபடி செய்ய விதைப்பண்ணை அமைப்பதால், கூடுதல் லாபம் பெறலாம். பாசிப்பயிறு சாகுபடிக்கு சித்திரைப்பட்டம் மிகவும் உகந்தது என்பதால், இதில் ஐபிஎம் 02 - 3, கோ- 8 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்து, ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் பயன்படுத்தி வரிசை வரிசையாக 30 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி இருக்கும் வகையில் சதுர மீட்டருக்கு 33 செடிகள் வரை விதைக்கலாம்.

பூக்கும் பருவத்திலும், இனங்காய் பருவத்திலும் 2 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் முதலில் ஊற வைத்து,அதனை வடிகட்டி தெளிந்த கரைசலை எடுத்து 200 லிட்டா் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். இந்த முறையில் விதைப்பண்ணை அமைத்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 500 கிலோ வரை பாசிப்பயிறு மகசூல் கிடைக்கும். பாசிப்பயிறு ரக விதைகள் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பாசிப்பயிறு விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா்கள் மற்றும் உதவி விதை அலுவலா்களை தொடா்பு கொண்டு விதைப் பண்ணை அமைத்து தரமான விதையினை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com