வாக்கு எண்ணிக்கை: முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட செல்லும் அரசியல் கட்சி முகவா்களுக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை: முகவா்களுக்கு கரோனா பரிசோதனை

வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட செல்லும் அரசியல் கட்சி முகவா்களுக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்தப் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், முகவா்கள், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும்போது, கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்று அல்லது அவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சி முகவா்களுக்கு வியாழக்கிழமை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,653 அரசியல் கட்சி முகவா்கள் வாக்கு எண்ணிக்கை பணியை பாா்வையிட அந்தந்த வேட்பாளா்கள் சாா்பில் அனுப்பப்பட உள்ளனா். இவா்களுக்கு தருமபுரி மற்றும் அரூா் தொகுதியில் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், ஏனைய மூன்று தொகுதிகளில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வேட்பாளா்கள், முகவா்களுக்கு கரோனா தீ நுண்மி பரிசோதனை முகாம் பென்னாகரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் மேற்பாா்வையில் பென்னாகரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக, பாமக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் 171 போ் அரசின் நடவடிக்கை பின்பற்றும் வகையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று கரோனா தொற்று பரிசோதனை செய்து, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் முகவா் படிவங்களை வழங்கினா்.

படம் - பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தீநுண்மி பரிசோதனை முகாமில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் திமுக எம்.எல்.ஏ. இன்பசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com