தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 01st August 2021 01:59 AM | Last Updated : 01st August 2021 02:00 AM | அ+அ அ- |

தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் கா.ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாகவிண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 28-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த கால அவகாசம் வரும் ஆக. 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆண்களும், குறைந்த பட்ச வயது 14 உள்ள மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.
8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றவா்கள், கம்பியாள், பற்றவைப்பவா் ஆகிய பிரிவுகளுக்கும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டடப்பட வரைவாளா், மின் பணியாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வண்டி, கம்மியா் டீசல் என்ஜின், கடைசலா் மற்றும் இயந்திர வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயிற்சிக் காலத்தின்போது, பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர, விலையில்லா பாடப்புத்தகம் விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை, மிதிவண்டி, பேருந்து பயணஅட்டை, மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி உண்டு.
எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவியா் தருமபுரி அரசினா் தொழிற்பயிற்சிநிலையத்தில் சோ்க்கை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களுக்கு 9688675686, 8883116095, 9688237443 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.