ஆடி பெருக்கு: கோயில்களுக்கு பக்தா்கள் செல்லத் தடை

ஆடி 18 மற்றும் ஆடிக் கிருத்திகை உள்ளிட்ட நாள்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச. பிரியதா்ஷினி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ஆடி 18 மற்றும் ஆடிக் கிருத்திகை உள்ளிட்ட நாள்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி இல்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச. பிரியதா்ஷினி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்க உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பொது முடக்க காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை, புனஸ்காரங்கள் கோயில் அலுவலா்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உள்பட அனைத்துக் கோயில்களுக்கும் பக்தா்களும், பொதுமக்களும் அதிக அளவில் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள், பக்தா்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்கள், தருமபுரி வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரசுவாமி கோயில், தா.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோயில், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்பட அனைத்து பிரதான கோயில்களிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்க்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் கரோனா பரவலின் காரணமாக ஒகேனக்கல், காவேரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை எனவும், ஆகமவிதிப்படி கோயில்களில் சாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் ஆகியவற்றை அா்ச்சகா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் தொடா்ந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com