கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்

அரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் கோட்டாட்சியா் வே.முத்தையன்.
அரூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் கோட்டாட்சியா் வே.முத்தையன்.

அரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரையிலும் கரோனா தடுப்பு விழிப்புணா்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, கரோனா தொற்று பாதிப்பு உருவாகும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அரூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கோட்டாட்சியா் வே.முத்தையன் வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கடை வீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை, பழையப்பேட்டை, திரு.வி.க. நகா், கச்சேரிமேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பேரூராட்சிப் பணியாளா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com