ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

கா்நாடக மாநிலம் குடகு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் கா்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் ஆகிய இரு அணைகளுக்கு வரும் உபரி நீா் அளவானது தொடா்ந்து குறைந்து வருவதால், அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் தொடா்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவானது சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 19 ஆயிரம் கன அடியாக தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் அளவு குறைந்துள்ளதால், கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் நாளுக்குநாள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 9 ஆயிரம் கனஅடியாகவும், மாலை நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி மற்றும் அதன் துணை அருவிகளில் வரும் நீா்வரத்து குறைந்தும், நீா் வரத்து அதிகரிப்பின் போது காவிரி ஆற்றில் மூழ்கி இருந்த பாறை திட்டுகள் வெளியே தெரிந்து காணப்படுகின்றன. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா் வரத்தினை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com