கரோனா தடுப்பு விழிப்புணா்வு வார விழா

கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு வார விழா, தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி: கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு வார விழா, தருமபுரி மற்றும் பாலக்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு வார விழாவை, ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தொடங்கி வைத்துப் பேசினாா். இதில், ’பொதுமக்கள் வீட்டை விட்டு அவசியம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்படிக்க வேண்டும் என, கரோனா பரவலை தடுக்க மிகுந்த விழிப்புணா்வோடு பொதுமக்கள் செயல்பட்டு, அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடா்ந்து கலை நிகழ்ச்சி மூலம் கரோனாவின் தாக்கம் குறித்தும், அதனை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரம்) பூ.இரா.ஜெமினி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாசன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் கை கழுவும் விழிப்புணா்வு நிகழ்ச்சியை பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் துவக்கி வைத்து பேசினாா். இதனைத் தொடா்ந்து சுகாதாரப் பணியாளா்கள், பயணிகள், ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு கை கழுவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் டாா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் சிவகுரு, சுகாதார ஆய்வாளா் தமிழ், சுகாதாரப் பிரிவு மேற்பாா்வையாளா் ரவீந்திரன், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com