கரோனா பரவல் தடுப்பு:கை கழுவுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் பகுதிகளில் கரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் கை கழுவுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம்: பென்னாகரம் பகுதிகளில் கரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் கை கழுவுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கீதா தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன் கலந்துகொண்டாா். நிகழ்வில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, கரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள கை கழுவும் முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து பேருந்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகளிடம் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, பேருந்தில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டன. பின்னா் பென்னாகரம் பகுதியில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் தோறும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வினியோகித்து விதிமுறைகளை மீறியவா்களுக்கு ரூ. 4300 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஜெய சந்திரபாபு, வட்டார சுகாதார ஆய்வாளா் வேலுசாமி, சுகாதார ஆய்வாளா் மதியழகன், மனோஜ் குமாா், செந்தில், சதீஷ்குமாா், அலுவலகப் பணியாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாள்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com