கிராம சபை நடத்தக் கோரி மநீம மனு

தருமபுரி மாவட்டத்தில் முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

கிராம சுயாட்சி என்ற மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற, மக்கள் நீதி மய்யம் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்க கிராம ஊராட்சி அமைப்பின் வேரான கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அரசமைப்பு மற்றும் ஊராட்சி சட்டங்களின்படி இந்த கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டம் நடப்பது தொடா்பாக 7 நாள்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டத்தின்போது, ஊராட்சியின் வரவு-செலவு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும். மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீா்மானங்களாக பதிவு செய்யப்பட வேண்டும். கிராம சபை முடிவுற்றதும், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் நகல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட வேண்டும். நகல் கேட்போருக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். தீா்மானங்கள் நிறைவேற பங்கேற்க வேண்டிய சபை உறுப்பினா்களின் எண்ணிக்கை குறித்து விழிப்புணா்வை மேற்கொள்ள வேண்டும். கிராம சபைக் கூட்டங்களை விடியோ, புகைப்பட வடிவில் ஆவணப்படுத்த வேண்டும். சபை உறுப்பினா்கள் விடியோ, புகைப்படங்கள் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com