அரூரில் ரூ. 49 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 49 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டன.

அரூரில் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 49 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டன.

அரூா் திரு.வி.க நகரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகின்றன. அரூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, அனுமன்தீா்த்தம் உள்ளிட்ட பகுதியிலுள்ள விவசாயிகள் பலா் பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு எடுத்து வந்திருந்தனா். இதில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எடுத்து வந்திருந்த 1450 பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டன. எம்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்று ரூ. 7,369 முதல் ரூ. 8,102 வரையிலும் ஏலம் போனது. இதில் ரூ. 49 லட்சம் மதிப்பில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com