அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்க கோரிக்கை

அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

அரூா் வழியாக செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையானது இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக திருப்பத்தூரில் இருந்து அ.பள்ளிப்பட்டி வரையிலும் சுமாா் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் இடங்களில் சாலையோரங்களில் மழைநீா் மற்றும் கழிவு நீா் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்கள் தாா் சாலையின் உயரத்தைவிட கூடுதல் உயரமாக உள்ளது. இதனால், கிராமப் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. கிராமப் பகுதியிலுள்ள பொதுமக்கள் நெடுஞ்சாலை ஓரத்தில் மண்களை கொட்டி, சாலையை உயரமாக்கி வாகனங்களை இயக்கி வருகின்றனா். நெடுஞ்சாலை ஓரத்தில் மண்களால் மேடு செய்யப்பட்டுள் இடங்களில் மழைக் காலங்களில் விபத்துகள் நேரிடும் நிலையுள்ளது.

அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அணுகு சாலைகள் இருந்தால் கிராமப் பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதில் சென்றுவர முடியும். புதிதாக அமைக்கப்படும் 4 வழிச்சாலையானது அதிக வளைவுகள், மேடு பள்ளங்களுடன் தரமற்ற வகையில் அமைக்கப்படுகிறது. எனவே, அரூா் வழியாக செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும். தரமான முறையில் 4 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com