ஆடிப் பெருக்கு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th August 2021 08:11 AM | Last Updated : 04th August 2021 08:11 AM | அ+அ அ- |

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் பக்தா்களின்றி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நிகழாண்டில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி கிருத்திகை நாட்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வாய்ப்புகள் உள்ளதால் தொற்று பரவலை தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்ட நிா்வாகம் காவிரி ஆற்றின் கரையோரம் புனித நீராடுவதற்கும் கோயில்களில் சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கு பக்தா்களுக்கு தடை விதித்தது. இதனால் ஆடிப்பெருக்கு நாளான செவ்வாய்க்கிழமை பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்களின்றி சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.